தள்ளிப்போகிறதா ‘பாபநாசம் 2’ ?.. கமலின் திட்டம் இதுதான் !

தள்ளிப்போகிறதா ‘பாபநாசம் 2’ ?.. கமலின் திட்டம் இதுதான் !

‘பாபநாசம் 2’ எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தள்ளிப்போகிறதா ‘பாபநாசம் 2’ ?.. கமலின் திட்டம் இதுதான் !

குடும்ப பின்னணியை கொண்டு எடுக்கப்பட்டு பிரம்மாண்ட வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘திரிஷ்யம்’. கடந்த 2013ம் ஆண்டு மோகன் லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றிப்பெற்றது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல இந்திய மொழிகளிலும், வெளிநாடுகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப்பெற்றது.

தள்ளிப்போகிறதா ‘பாபநாசம் 2’ ?.. கமலின் திட்டம் இதுதான் !

தமிழில் கமலின்‌ வித்தியாசமான நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் உருவானது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கவுதமி இணைந்து நடித்திருந்தனர். தமிழிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ‘திரிஷ்யம்’ முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ஓடிடியில் வெளியான இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தள்ளிப்போகிறதா ‘பாபநாசம் 2’ ?.. கமலின் திட்டம் இதுதான் !

இதற்கிடையே ‘பாபநாசம் 2’ எப்போது உருவாகும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. ஜீத்து ஜோசப்பும் ‘பாபநாசம் 2’ படத்தை இயக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை இயக்குனர் ஜீத்து ஜோசப் அளித்தார். அப்போது ‘பாபநாசம் 2’ எப்போது உருவாகும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,நடிகர் கமல் ‘விக்ரம்’,இந்தியன் 2 படங்களில் நடிக்கவுள்ளார்.‌இந்த இரண்டு படங்களை முடித்த பிறகுதான் ‘பாபநாசம் 2’ படத்தில் இணைவார் என தெரிவித்துள்ளார்.மேலும் தற்போது வெங்கடேஷை வைத்து இயக்கி வரும் தெலுங்கு ‘திரிஷ்யம் 2’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறினார். அதேநேரம் கமலும் ‘விக்ரம்’ படத்தில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story