நடிகர் சிம்பு படம் வெளியாவதில் சிக்கல். தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

நடிகர் சிம்பு படம் வெளியாவதில் சிக்கல்.  தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

நடிகர் சிம்புவின் ‘மஹா’ படம் வெளியிடுவதற்கு தடைக்கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு படம் வெளியாவதில் சிக்கல்.  தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

நடிகர் சிம்பு – ஹன்சிகா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மஹா’.  ஜமீல் இயக்கியுள்ள இப்படம் நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ளது. இதில் நடிகர் ஶ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை எக்ஸெட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

நடிகர் சிம்பு படம் வெளியாவதில் சிக்கல்.  தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

இந்நிலையில் ‘மஹா’ படத்தை தனக்கு தெரியாமல் ஓ.டி.டியில் வெளியிட படத்தின் தயாரிப்பாளர் முயற்சிப்பதாகவும், அதனால் படத்தின் வெளியீட்டு தடை கோரி இயக்குனர் ஜமீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், இந்த படத்திற்கு தேவையான காட்சிகளை எடுக்காமல், தனது உதவி இயக்குனரை வைத்து புதிய காட்சிகளை படமாக்கி, அதை எடிட் செய்து படத்தை வெளியிட தயாரிப்பாளர் முயற்சிப்பதாக இயக்குனர் ஜமீல் அந்த மனுவில் குற்றச்சாட்டியுள்ளார்.

நடிகர் சிம்பு படம் வெளியாவதில் சிக்கல்.  தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

மேலும் படத்தை இயக்க சம்பளமாக 24 லட்சம் ரூபாய் பேசப்பட்டதாகவும், ஆனால் இதுவரை 8 லட்சம் வரைதான் கொடுக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 16 லட்சம் ரூபாயை வழங்கவேண்டும் எனவும், தனது கதையை சிதைத்து, எனக்கு தெரியாமல் வேறு சிலரை வைத்து படத்தை முடித்ததது எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது. அதற்கு நஷ்ட ஈடாக, தனக்கு 10லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என்று அந்த மனுவில் ஜமீல் கோரிக்கை வைத்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் 19ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டார். இதனால் மஹா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Share this story