வெற்றி நடைப்போடும் ‘வாத்தி கம்மிங்’… 150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை…

வெற்றி நடைப்போடும் ‘வாத்தி கம்மிங்’… 150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை…

‘வாத்தி கம்மிங்’ பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

வெற்றி நடைப்போடும் ‘வாத்தி கம்மிங்’… 150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை…

விஜய் நடித்து மாபெரும் ஹிட்டடித்த படங்களின் வரிசையில் ‘மாஸ்டர்’ படத்திற்கு தனி இடம் உண்டு. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் வாத்தியார் கேரக்டரில் நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து பட்டைய கிளப்பியிருப்பார். மேலும் நடிகை மாளவிகா மோகனன், நடிகர் சாந்தனு, ஆண்ட்டியா, கௌரி கிஷன்  உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வெற்றி நடைப்போடும் ‘வாத்தி கம்மிங்’… 150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை…

கடந்த ஜனவரி மாதம் பொங்கலையொட்டி வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப்பெற்று திரையரங்குகளில் நல்ல வசூலை வாரி குவித்தது. அனிரூத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’  போன்ற பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் டிரெண்டாகியுள்ளது.

வெற்றி நடைப்போடும் ‘வாத்தி கம்மிங்’… 150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை…

இதில் ‘வாத்தி கம்மிங்’ பாடல் ஏற்கனவே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி தங்களது வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘வாத்தி கம்மிங்’ பாடல் மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி யூடியூப்பில் இந்த பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.

Share this story