பிரபல நடிகரின் மறைவால் செல்வராகவன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்!

பிரபல நடிகரின் மறைவால் செல்வராகவன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்!

நடிகர் நிதிஷ் வீராவின் மறைவு சாணிக் காயிதம் படக்குழுவினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக வளர்ந்து வந்தவர் நிதிஷ் வீரா. அவர் வெண்ணிலா கபடி குழு, காலா, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘அசுரன்’ படத்தில் அவரது நடிப்பை அனைவரது மத்தியிலும் பரவலான பாராட்டைப் பெற்றது.

பிரபல நடிகரின் மறைவால் செல்வராகவன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்!

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிதிஷ் வீரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நிதிஷ் வீரா, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘சாணிக் காயிதம்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

பிரபல நடிகரின் மறைவால் செல்வராகவன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்!

தற்போது நிதிஷ் வீரா மறைவு சாணிக் காயிதம் படக்குழுவினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. முக்கியக் கதாபாத்திரம் என்பதால் அவருக்குப் பதிலாக வேறொரு நடிகரை வைத்து மீண்டும் அந்தக் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story