தொடர்ந்து தமிழில் கலக்கவிருக்கும் பூஜா ஹெக்டே… விஜய் அடுத்து யாருக்கு ஜோடி ?

தொடர்ந்து தமிழில் கலக்கவிருக்கும் பூஜா ஹெக்டே… விஜய் அடுத்து யாருக்கு ஜோடி ?

நடிகை பூஜா ஹெக்டே அடுத்து நடிக்கவிருக்கும் ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து தமிழில் கலக்கவிருக்கும் பூஜா ஹெக்டே… விஜய் அடுத்து யாருக்கு ஜோடி ?

மிஷ்கின் ‌இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் வெளியாகி பெரிய தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு தமிழில் எந்த திரைப்படமும் நடிக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் வெளியான ‘துவ்வாடு ஜெகன்நாதம்’, ‘மகரிஷி’, ‘அல வைகுந்தபுரமலு’ போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றன.

தொடர்ந்து தமிழில் கலக்கவிருக்கும் பூஜா ஹெக்டே… விஜய் அடுத்து யாருக்கு ஜோடி ?

தெலுங்கில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட் ‌ ‘மொகஞ்சதாரோ’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம்‌ மாபெரும் வெற்றிப் பெற்றதால்‌ ‘ஹவுஸ்ஃபுல் 4’ உள்ளிட்ட ‌சில படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க ஆரம்பித்தார். இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து தெலுங்கு, இந்தி என இருமொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

தொடர்ந்து தமிழில் கலக்கவிருக்கும் பூஜா ஹெக்டே… விஜய் அடுத்து யாருக்கு ஜோடி ?

தற்போது விஜய்‌ -நெல்சன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யை அடுத்து தமிழில் நடிக்கவிருக்கும் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா – சூர்யா கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.‌

Share this story