“அனைத்து மக்களும் திருப்தி அடையுமாறு ஆட்சி செய்ய வாழ்த்துக்கள்”… முக ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

“அனைத்து மக்களும் திருப்தி அடையுமாறு ஆட்சி செய்ய வாழ்த்துக்கள்”… முக ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக வெற்றி பெற்றதை அடுத்து, நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்ற்னர். தற்போது நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

“அனைத்து மக்களும் திருப்தி அடையுமாறு ஆட்சி செய்ய வாழ்த்துக்கள்”… முக ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story