எளிமையான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா!

எளிமையான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா!

நடிகை சமந்தா மிகவும் எளிமையான முறையில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

தென்னிந்தியாவின் மிகவும் அழகான மற்றும் திறமையான நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கியூட்டான நடிப்பால் இந்தியா முழுவதும் பல கோடி ரசிகர்களை பெற்றுள்ளார் சமந்தா. இன்று பலரின் இன்ஸ்பிரேஷன் ஆக சமந்தா மாறியுள்ளார் என்றால் மிகையாகாது.

எளிமையான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா!

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இரண்டாம் பாகத்தின் மூலம் ஓடிடி தளத்திலும் என்ட்ரி கொடுக்கிறார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை யூகிக்க முடியாத அளவில் வேகமெடுத்து வருகிறது. மக்களும் அரசும் அதை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் திரைத்துறையில் பெரிய நிகழ்ச்சிகள் ஏதும் நடக்கவில்லை. நடிகர்களும் தங்கள் வீட்டு விசேஷங்களை எளிமையான முறையில் நடத்தி வருகின்றனர்.

இன்று நடிகை சமந்தா தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து அவருக்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். நடிகை சமந்தாவும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மிக எளிமையான முறையில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சமந்தா தற்போது சகுந்தலம் என்ற வரலாற்றுப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Share this story