மீண்டும் ரிலீசாகும் சந்தோஷ் சிவனின் சர்ச்சை திரைப்படம்… 7 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடியில் ‘இனம்’

மீண்டும் ரிலீசாகும் சந்தோஷ் சிவனின் சர்ச்சை திரைப்படம்… 7 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடியில் ‘இனம்’

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘இனம்’ திரைப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

மீண்டும் ரிலீசாகும் சந்தோஷ் சிவனின் சர்ச்சை திரைப்படம்… 7 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடியில் ‘இனம்’

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடைபெற்ற உள்நாட்டு போரை மையமாக வைத்து உருவான திரைப்படம் ‘இனம்’ ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் உகந்தா, கரண், சரிதா, கருணா. அனக்கி, ஷியாம் சுந்தர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குனர் லிங்குசாமி தயாரித்திருந்த இப்படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியானது.

மீண்டும் ரிலீசாகும் சந்தோஷ் சிவனின் சர்ச்சை திரைப்படம்… 7 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடியில் ‘இனம்’

இப்படம் வெளியிடுவதற்கு முன்பே, ஒரு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். படத்திற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து, இதில் இடம்பெற்ற சில சர்ச்சை காட்சிகளை நீக்கிய பிறகே திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பாளர்கள் சம்மதித்தனர். படத்தை திரையிட்ட பிறகு சொன்ன காட்சிகளை நீக்கவில்லை எனக்கூறி, பிரச்சனை எழுந்தது. இதனால் ஒரு வாரம் மட்டுமே ஓடிய இப்படத்தை திரையரங்குகளிலிருந்து திரும்ப பெறுவதாக படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி அறிவித்தார்.

இந்நிலையில் இந்த படத்தை மீண்டும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிவன், ‘இனம்’ படத்தை பார்க்க விரும்புவர்களுக்காக ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story