கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு கோடி அளித்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த்!

கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு கோடி அளித்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு கோடி அளித்துள்ளார்.

மக்களை நித்தமும் ரணப்படுத்தி வரும் கொரோனா என்னும் அரக்கனிடமிருந்து மக்களைப் பாதுகாக்க, அரசு முடிந்த அளவில் முயற்சி எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களைக் காக்கவும், நம் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மக்கள் தங்களால் முடிந்த நிதி அளித்து உதவுமாறு கோரியிருந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. மக்கள் பலர் முன்வந்து நிதி அளித்து உதவி வருகின்றனர்.

திரைத்துறை பிரபலங்களும் நிதி அளித்து வருகின்றனர். நடிகர் சூர்யா குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன்பு முதல்வரை நேரில் சந்தித்து 1 கோடி ரூபாய் நிதி அளித்தனர். நேற்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் 25 லட்சம் நிதி அளித்தார். சமீபத்தில் நடிகர் அஜித்குமார் முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் நிதி அளித்தார்.

கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு கோடி அளித்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த்!

தற்போது நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் முதல்வர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளித்து உதவியுள்ளார். திரைத்துறை பிரபலங்கள் பலர் முன்வந்து உதவுவது மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.

Share this story