‘வலிமை’ படத்துல அஜித் மாஸ் காட்டும் பஸ் சேஸிங் சீன் இருக்கு… ஸ்பெஷல் அப்டேட்!

‘வலிமை’ படத்துல அஜித் மாஸ் காட்டும் பஸ் சேஸிங் சீன் இருக்கு… ஸ்பெஷல் அப்டேட்!

வலிமை படத்தில் அஜித், பஸ் சேஸிங் காட்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அப்டேட்கள் வெளியாக இருக்கிறது. அதற்காக அஜித் ரசிகர்கள் தீவிரமாகக் காத்திருக்கின்றனர்.

‘வலிமை’ படத்துல அஜித் மாஸ் காட்டும் பஸ் சேஸிங் சீன் இருக்கு… ஸ்பெஷல் அப்டேட்!

வலிமை திரைப்படத்தில் வழக்கமான அஜித் படங்களைப் போல பைக் அல்லது கார் சேஷிங் காட்சிகள் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வலிமை படத்தில் அஜித் கெத்தாக பஸ் சேஸிங் காட்சிகளில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அஜித் பஸ் ஓட்டும் காட்சிகள் படத்தின் முக்கிய மாஸ் காட்சிகளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே அந்தக் காட்சிகளுக்கு தியேட்டர் விசில் சத்தத்தால் அலறப்போவது கன்ஃபார்ம்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து எச்.வினோத்- அஜித் மற்றும் போனி கபூர் கூட்டணி வலிமை படத்திற்காக இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

‘வலிமை’ படத்துல அஜித் மாஸ் காட்டும் பஸ் சேஸிங் சீன் இருக்கு… ஸ்பெஷல் அப்டேட்!

இந்தப் படத்தில் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கன்னட நடிகர் கார்த்திகேயா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அஜித் வலிமை படத்தின் டப்பிங்கை முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் வலிமை முதலில் இருக்கிறது.

Share this story