சூப்பர் டூப்பர் சந்தோஷத்தில் உள்ளேன்… தளபதியுடன் ஜோடியாவதில் மகிழ்ச்சி – நடிகை பூஜா ஹெக்டே ட்வீட்!

சூப்பர் டூப்பர் சந்தோஷத்தில் உள்ளேன்… தளபதியுடன் ஜோடியாவதில் மகிழ்ச்சி – நடிகை பூஜா ஹெக்டே ட்வீட்!

விஜய்யுடன் ஜோடி சேருவதில் மகிழ்ச்சியாக உள்ளேன் நடிகை பூஜா ஹெக்டே ட்வீட் செய்துள்ளார்.

சூப்பர் டூப்பர் சந்தோஷத்தில் உள்ளேன்… தளபதியுடன் ஜோடியாவதில் மகிழ்ச்சி – நடிகை பூஜா ஹெக்டே ட்வீட்!

தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர், கடந்த 2012ம் ஆண்டு இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். நடிகர் ஜீவா சூப்பர் ஹீரோவாக நடித்திருந்த இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு எந்த தமிழ் படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்கவில்லை.

சூப்பர் டூப்பர் சந்தோஷத்தில் உள்ளேன்… தளபதியுடன் ஜோடியாவதில் மகிழ்ச்சி – நடிகை பூஜா ஹெக்டே ட்வீட்!

பின்னர் தெலுங்கில் ‘ஒக்க லைலா கோசம்’, ‘முகுந்தா’, பாலிவுட்டில் நடிகர் ஹிரித்திக் ரோஷனுடன் ‘மொகஞ்சதாரோ’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு அல்லு அர்ஜுனுடன் ‘துவ்வடு ஜகநாதம்’, மகேஷ் பாபுடன் ‘மகரிஷி’, அக்ஷய் குமாருடன் ‘ஹவுஸ் ஃபுல் 4’, மீண்டும் அல்லு அர்ஜூனுடன் ‘வைகுந்தபுறமுலோ’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். புகழ்பெற்று விளங்கும் பூஜா ஹெக்டே, இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியான ஹீரோயினாக உள்ளார்.

சூப்பர் டூப்பர் சந்தோஷத்தில் உள்ளேன்… தளபதியுடன் ஜோடியாவதில் மகிழ்ச்சி – நடிகை பூஜா ஹெக்டே ட்வீட்!

இந்நிலையில் விஜய் – நெல்சன் கூட்டணியில் இயக்கத்தில் ‘தளபதி 65’ படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்தது. இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள பதிவில், இந்த படத்தில் இணைந்ததால் சூப்பர் டூப்பர் சந்தோஷத்தில் உள்ளேன். ஷூட்டிங் வரை காத்திருக்க முடியாது. மீண்டும் தமிழ் சினிமாவுக்கு தளபதியின் ஜோடியாக வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் டூப்பர் சந்தோஷத்தில் உள்ளேன்… தளபதியுடன் ஜோடியாவதில் மகிழ்ச்சி – நடிகை பூஜா ஹெக்டே ட்வீட்!

Share this story