விஜய்க்கு வில்லனா செல்வராகவன் ?. வதந்திக்கு முற்றுப்புள்ளி!

விஜய்க்கு வில்லனா செல்வராகவன் ?. வதந்திக்கு முற்றுப்புள்ளி!

விஜய்யின் 65 படத்தில் வில்லனாக செல்வராகவன் நடிப்பதாக வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் அதிரடி ஆக்ஷனில் உருவாகி வருகிறது ‘தளபதி 65’. நெல்சன் இயக்கும் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தில் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஒப்பந்தமாகி உள்ளார்.

விஜய்க்கு வில்லனா செல்வராகவன் ?. வதந்திக்கு முற்றுப்புள்ளி!

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் ஜார்ஜியாவில் தொடங்கி 16 நாட்கள் நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கில் விஜய்யும், பூஜா ஹெக்டேவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை சென்னையில் ஆரம்பிக்க பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட மால் போன்ற செட் அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரானா அதிகமாக பரவி வருவதால் இந்த பணிகளை நிறுத்த சொல்லிவிட்டார் விஜய்.

விஜய்க்கு வில்லனா செல்வராகவன் ?. வதந்திக்கு முற்றுப்புள்ளி!

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது. அதன்பிறகு இயக்குனர் செல்வராகவன், விஜய்க்கு வில்லனாகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் இது எதுவுமே உண்மையில்லை என்றும், யாரோ திட்டமிட்டு செய்திகளை பரப்பி வருகிறார்கள் என படக்குழுவிலிருந்து தகவல் கசிந்துள்ளது. எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போது தான் தெரிய வரும். இதற்கிடையே விஜய்யுடன் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இறுதியாக இவர்தான் இந்த படத்தின் வில்லனாக இருக்கலாம் எனவும் உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

Share this story