விஜய் – நெல்சன் கூட்டணியில் இணைந்த பிரபலம்… ‘தளபதி 65’ புதிய அப்டேட்… Thalapathy 65

விஜய் – நெல்சன் கூட்டணியில் இணைந்த பிரபலம்… ‘தளபதி 65’ புதிய அப்டேட்… Thalapathy 65

தளபதி 65 படத்தில் பிரபல நடன இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளதாக அவரே தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

விஜய் – நெல்சன் கூட்டணியின் படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிரூத் இசையில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற இருக்கிறார். சண்டைக்காட்சிகள் எடுக்க அன்பறிவ் சகோதரர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

விஜய் – நெல்சன் கூட்டணியில் இணைந்த பிரபலம்… ‘தளபதி 65’ புதிய அப்டேட்… Thalapathy 65

விஜய் உளவுத்துறை ஏஜெண்டாக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங்கை துவங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை மொத்தமாக 90 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்ட ஷூட்டிங்கை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டிருந்த படக்குழு, அந்நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் முதற்கட்ட ஷூட்டிங்கை சென்னையில் ஆரம்பிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் – நெல்சன் கூட்டணியில் இணைந்த பிரபலம்… ‘தளபதி 65’ புதிய அப்டேட்… Thalapathy 65

அதற்காக பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஏப்ரல் இறுதிக்குள் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்களை எடுக்க இந்த பிரம்மாண்ட செட் போடப்பட்டு வருகிறது.

விஜய் – நெல்சன் கூட்டணியில் இணைந்த பிரபலம்… ‘தளபதி 65’ புதிய அப்டேட்… Thalapathy 65

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இணைந்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், படத்தின் பாடல் காட்சிகளின் ரிகர்சல் ஏப்ரல் 24ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும், மே 3ம் தேதியிலிருந்து 9ம் தேதி பாடல் பதிவின் ஷூட்டிங் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாய்ப்பளித்த தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Share this story