பிரம்மாண்டமாக தயாராகும் ‘தளபதி 66’. விஜய்க்கு இத்தன கோடி சம்பளமா ? #Thalapathy 66

பிரம்மாண்டமாக தயாராகும் ‘தளபதி 66’. விஜய்க்கு இத்தன கோடி சம்பளமா ?  #Thalapathy 66

‘விஜய் 66’ படம் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட உருவாக உள்ளதாக படத்தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

நடிகர் விஜய் 65வது படம் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கடந்த மாதம் ஜார்ஜியாவில் தொடங்கி 16 நாட்கள் முடிவடைந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கவிருந்தது. ஆனால் கொரானா உச்சக் கட்டத்தை அடைந்துள்ளதால் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக தயாராகும் ‘தளபதி 66’. விஜய்க்கு இத்தன கோடி சம்பளமா ?  #Thalapathy 66

இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தகவல்கள் இப்போதே கசிய தொடங்கிவிட்டது. தோழா, மகரிஷி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளியுடன் தற்போது விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் வம்ஷி, நடிகர் விஜய்யை சந்தித்து, ஒரு வித்தியாசமான கதையை கூறியதாகவும், அந்த கதை விஜய்க்கு பிடித்துவிட்டதால் உடனே ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

பிரம்மாண்டமாக தயாராகும் ‘தளபதி 66’. விஜய்க்கு இத்தன கோடி சம்பளமா ?  #Thalapathy 66

இதையடுத்து இந்த படத்தின் ஸ்கிரிப் பணிகளை வம்ஷி செய்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாகவும், ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் 80 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், அதனால் இந்த படத்திற்கு 90 வரை விஜய்க்கு சம்பளமாக தர தயாரிப்பாளர் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2022 ஜனவரியில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story