கடும் ஆக்ஸிஜன் தட்டுபாடு.. விஜய் உத்தரவின் பேரில் மருத்துவமனைக்கு உதவி…

கடும் ஆக்ஸிஜன் தட்டுபாடு.. விஜய் உத்தரவின் பேரில் மருத்துவமனைக்கு உதவி…

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுபாடு நிலவுவதால், ரசிகர் மன்றம் சார்பில் உதவிகளை செய்ய நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கடும் ஆக்ஸிஜன் தட்டுபாடு.. விஜய் உத்தரவின் பேரில் மருத்துவமனைக்கு உதவி…

உலகம் முழுவதும் கொரானா தனது கோர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்குநாள் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்தியாவில் நேற்றைய தினத்தில் மட்டும் புதிய உச்சமாக ஒரே நாளில் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2,771 பேர் உயிரிழந்தனர்.

கடும் ஆக்ஸிஜன் தட்டுபாடு.. விஜய் உத்தரவின் பேரில் மருத்துவமனைக்கு உதவி…

அதேசமயம் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன மத்திய, மாநில அரசுகள். ஆனால் இன்னொரு புறம் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டில் கோவி ஷீல்டு, கோவேக்சின் என இருவகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தாலும், தட்டுபாடு நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதனால் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

கடும் ஆக்ஸிஜன் தட்டுபாடு.. விஜய் உத்தரவின் பேரில் மருத்துவமனைக்கு உதவி…

நாட்டிலேயே மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தடுப்பூசி தட்டுபாட்டால் தவித்து வரும் அதேவேளையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுபாடு பெருத்த கவலையை ஏற்படுத்தி வருகிறது.

கடும் ஆக்ஸிஜன் தட்டுபாடு.. விஜய் உத்தரவின் பேரில் மருத்துவமனைக்கு உதவி…

இந்நிலையில் இந்த நிலைமையை நடிகர் விஜய்யும் கவனித்து வருகிறார். அதனால் தனது ரசிகர் மன்றத்தில் மூலம் பல உதவிகளை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதற்கட்டமாக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விஜய் ரசிகர் மன்றத்தினர் வழங்கியுள்ளனர். இதேபோன்று முகக் கவசங்கள், கையுறைகள் போன்ற மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

Share this story