தள்ளிப்போகும் ‘விஜய் 65’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு… டென்ஷனில் நெல்சன்…

தள்ளிப்போகும் ‘விஜய் 65’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு… டென்ஷனில் நெல்சன்…

விஜய் – நெல்சன் கூட்டணி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொரானா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தள்ளிப்போகும் ‘விஜய் 65’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு… டென்ஷனில் நெல்சன்…

விஜய் – நெல்சன் கூட்டணியின் படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பெயரிடப்படாத இப்படத்தை பெரிய பெட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தில் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

தள்ளிப்போகும் ‘விஜய் 65’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு… டென்ஷனில் நெல்சன்…

இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் 16 நாட்கள் நடைபெற்றது. பின்னர் அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை தொடங்க ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்த இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் கதைப்படி ஒரு மாலில் பிரம்மாண்ட காட்சிகளை, படமாக்க படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரானா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை. இதனால் சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் ஷாப்பிங் மால் போன்று பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கலாம் என படக்குழுவினர் முடிவெடுத்திருந்தனர்.

தள்ளிப்போகும் ‘விஜய் 65’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு… டென்ஷனில் நெல்சன்…

இந்நிலையில் கொரானா நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் செட் அமைக்கும் பணிகளை தொழிலாளர்கள் நலன் கருதி நிறுத்தப்பட்டுள்ளதாம். அதனால் இந்த மாதம் தொடங்க இருந்த இரண்டாம் கட்ட ஷூட்டிங், ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறும் என கூறப்படுகிறது. திட்டமிட்டப்படி ஷூட்டிங்கை நடத்த முடியாததால் டென்ஷனில் உள்ளராம் நெல்சன்.

Share this story