ஹாலிவுட் பட ரேஞ்சில் எடுக்கப்படும் தல அஜித்தின் வலிமை !

ஹாலிவுட் பட ரேஞ்சில் எடுக்கப்படும் தல அஜித்தின் வலிமை !

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் வலிமை படத்திற்கு கிறிஸ்டோபர் நோலனின் டெனன்ட் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான நீரவ்ஷா இறங்கியுள்ளது அஜித் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் பட ரேஞ்சில் எடுக்கப்படும் தல அஜித்தின் வலிமை !

அஜித் – எச்.வினோத் கூட்டணி இரண்டாவதாக ‘வலிமை’ படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி எனும் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித் இரண்டாவது முறையாக ஹெச் வினோத் உடன் கூட்டணி அமைத்து ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ‘வலிமை’ படம் ரேஸிங் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இப்படம் ஜனவரி மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் பட ரேஞ்சில் எடுக்கப்படும் தல அஜித்தின் வலிமை !

இந்நிலையில் ஹிஸ்டோபர் நோலனின் பெரிய பட்ஜெட் ஹாலிவுட் படமான டெனெடில் கூடுதல் கேமரா ஆபரேட்டராக பணியாற்றிய நீரவ் ஷா, வலிமை படத்தின் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார்.
இவர் ஏற்கெனவே அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பில்லா’ படத்தில் பணியாற்றியுள்ளார். மேலும் ‘கிரீடம்’ மற்றும் மிகச் சமீபத்திய படமான நேர்கொண்ட பார்வை படத்திலும் பணியாற்றியுள்ளார்.

இவர் தல அஜித்துடன் மீண்டும் இணைத்துள்ளதால் அஜித் விசிறிகளின் சமூகவலைத்தளங்களில் இவர் தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளார். ஹாலிவுட்டில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் அஜித் படத்தில் இணைத்துள்ளதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this story