ஆக்ஷன் காட்சிகளில் அடித்து நொறுக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி!

ஆக்ஷன் காட்சிகளில் அடித்து நொறுக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி!

சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன் நடித்து வரும் படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் ரவுடிகளை அடித்து நொறுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கு தெரிந்த செய்தி தான். அஜித்தின் உல்லாசம்  படத்தை இயக்கிய ஜேடி -ஜெர்ரி இரட்டையர் இந்தப் படத்தை இயக்குகின்றனர்.

ஆக்ஷன் காட்சிகளில் அடித்து நொறுக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி!

இப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்திகா திவாரி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட  பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். 2019-ம் ஆண்டே துவங்கப்பட்ட இப்படம் கொரோனா காரணமாக முடங்கியது. தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

ஆக்ஷன் காட்சிகளில் அடித்து நொறுக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி!

தற்போது அருள் சரவணன் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு கெத்தாக நடந்து வரும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆக்ஷன் காட்சிகளில் அடித்து நொறுக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி!

இப்படத்திற்கு அனலரசு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளின் இறுதி வடிவத்தைப் பார்த்த அருள் மிகவும் அருமையாக வந்திருப்பதாக அனலரசுவை மெச்சினாராம். இந்த சண்டைக் காட்சி நன்றாக வந்திருப்பதைப் பார்த்துவிட்டு படத்தில் மற்றொமொரு சண்டைக்காட்சி வைக்குமாறும் கேட்டுள்ளாராம்.

என்ட்ரியே வேற லெவலில் கொடுப்பார் போல!

ஆக்ஷன் காட்சிகளில் அடித்து நொறுக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி!

Share this story