முதலமைச்சர் ஸ்டாலிடம் கொரானா நிவாரண நிதி 5 லட்ச ரூபாய் வழங்கினார் கவிஞர் வைரமுத்து!

முதலமைச்சர் ஸ்டாலிடம் கொரானா நிவாரண நிதி 5 லட்ச ரூபாய் வழங்கினார்  கவிஞர் வைரமுத்து!

கொரானா நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சத்தை முதலமைச்சர் ஸ்டாலிடம் வழங்கினார் கவிஞர் வைரமுத்து.

நாடு முழுவதும் தற்போது கொரோனா 2-ம் அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றிற்கு 30 ஆயிரம் பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் தாராளமாக நிதி அளிக்கும்படி பிரபலங்களை கேட்டுக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதையடுத்து சினிமாத்துறை சார்பில் முதல் ஆளாக நடிகர் சிவகுமார் குடும்பம் 1 கோடி ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வழங்கினர். இதைத்தொடர்ந்து நடிகர் உதயநிதி 25 லட்சமும், நடிகர் அஜீத் 25 லட்சமும், இயக்குனர் முருகதாஸ் 25 லட்சமும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் 1கோடியும் வழங்கியுள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலிடம் கொரானா நிவாரண நிதி 5 லட்ச ரூபாய் வழங்கினார்  கவிஞர் வைரமுத்து!

இதேபோன்று ஏராளமான பிரபலங்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பண உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அளித்துள்ளார். அவர் நிதி அளித்த புகைப்படத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Share this story