இன்டர்போல் அதிகாரியாக மிரட்டும் இர்பான் பதான்… ‘கோப்ரா’ படக்குழுவின் பிறந்தநாள் ஸ்பெஷல் ட்ரீட்!

இன்டர்போல் அதிகாரியாக மிரட்டும் இர்பான் பதான்… ‘கோப்ரா’ படக்குழுவின் பிறந்தநாள் ஸ்பெஷல் ட்ரீட்!

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அடுத்து கோப்ரா படக்குழு அவருடைய சிறப்புப் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

விக்ரம் பல வேடங்களில் மிரட்டும் ‘கோப்ரா’ படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், இப்படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றனர்.

இன்டர்போல் அதிகாரியாக மிரட்டும் இர்பான் பதான்… ‘கோப்ரா’ படக்குழுவின் பிறந்தநாள் ஸ்பெஷல் ட்ரீட்!

இன்று இர்பான் பதான் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அடுத்து கோப்ரா படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்தப் படத்தில் இர்பான் பதானின் அஸ்லான் இல்மாஸ் என்ற பிரெஞ்சு நாட்டு இன்டெர்போல் அதிகாரியாக நடிக்கிறார்.

பிளாக் அண்ட் வைட் போஸ்டரில் மாஸான லுக்கில் இர்பான் பதான் மிரட்டும் வகையில் உள்ளது. நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து வருகின்றனர். படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story