சோனா ஆப்ரஹாம் என்ற சட்டக் கல்லூரி மாணவர, தனது பள்ளி பருவத்தில் நடித்த படத்தின் காட்சிகள் ஆபாச இணையத்தளங்களில் வெளியானதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
சோனா என் ஆப்ரஹாம் என்ற சட்டக்கல்லூரி மாணவி தன்னுடைய 14வது வயதில் ஃபார் சேல்(For sale) என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் காதல் சந்தியா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அந்த படத்தில் 14 வயது சோனா பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். அதனால் அவரது சகோதரி சந்தியா தற்கொலை செய்து கொள்வதாக கதை அமைக்கப்பட்டது.

நான் நடித்த அந்த பலாத்கார காட்சியை முதலில் 150 பேர் முன்னிலையில் எடுக்க அப்படத்தின் இயக்குனர் சதீஷ் அனந்தபுரி திட்டமிட்டிருந்த நிலையில், நான் நடிக்க மறுத்து விட்டதால் என்னை வற்புறுத்தி இயக்குனர் அலுவலகத்தில் வைத்து அந்த பலாத்கார காட்சியை படமாக்கினார்கள். அந்த காட்சியின் விபரீதம் குறித்த புரிதல் அப்போது எனக்கு இல்லை. அதனால் எப்போதும் போல பள்ளிக்குச் சென்றுவிட்டேன்.

அந்த படம் வெளியான போது நான் நடித்த பலாத்காரம் செய்த காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அவை இல்லாமல் வெளியானது. ஆனால் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து எடிட் செய்யப்படாத அந்த ஆபாச காட்சிகள் சமூக தளங்களில் பரவி வந்தன.
இந்த விவகாரம் சில மாதங்களுக்கு முன்புதான் எனக்கு தெரிய வந்தது அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், அந்த விடீயோவை அனைத்து தளங்களில் இருந்தும் நீக்கக் கோரி முதல்வர், சைபர் கிரைம் காவல்துறையினரின் அனைவரிடமும் புகார் அளித்து விட்டேன். ஆனால் அந்த வீடியோ குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மேலும் அந்த வீடியோ பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் என் குடும்பத்திற்கு ஏற்படும் அவமானத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு நான் தற்கொலைக்கு முயன்றேன்” என்று சோனா தான் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.