காமெடி நடிகர் ஐயப்பன் கோபி மறைவு.. மீளா துயரத்தில் தமிழ் சினிமா

காமெடி நடிகர் ஐயப்பன் கோபி மறைவு.. மீளா துயரத்தில் தமிழ் சினிமா

காமெடி நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பால் மறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு வருடமாக கொரானா என்ற கொடூர அரக்கனுடன் போராடி வருகிறோம். இந்த போராட்டத்தில் இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கொரானாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடியே கிடக்கின்றன.

காமெடி நடிகர் ஐயப்பன் கோபி மறைவு.. மீளா துயரத்தில் தமிழ் சினிமா

மற்ற துறை போன்றுதான் சினிமா துறையை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக எந்தவொரு சினிமா படத்தின் படப்பிடிப்புகளும் சரியாக நடைபெறவில்லை. இதனால் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். வருமானமின்றி தவிக்கும் இவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.

காமெடி நடிகர் ஐயப்பன் கோபி மறைவு.. மீளா துயரத்தில் தமிழ் சினிமா

இப்படிப்பட்ட மோசமான நிலையில் சினிமா துறையில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. ஏற்கனவே நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் என முக்கிய பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வரிசையில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தவர் ஐயப்பன் கோபி. அவர் கடந்த 24ம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் தற்போதுதான் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த மரணங்களால் திரையுலகமே அச்சத்தில் உறைந்துள்ளது.

Share this story