‘மாறா’ படத்தைப் பார்க்கணுமா வேண்டாமா என்று குழப்பமா..! இதையும் ஒரு முறை படிச்சிடுங்க.!

‘மாறா’ படத்தைப் பார்க்கணுமா வேண்டாமா என்று குழப்பமா..! இதையும் ஒரு முறை படிச்சிடுங்க.!

துல்கர் சல்மான், பார்வதி மேனன் நடித்த ‘சார்லி’ படத்தை ஐந்து வருடங்களுக்கு அப்புறம் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரையும் வைத்து ‘மாறா’ வாங்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் திலீப் குமார். ’விக்ரம் வேதா’ படத்துக்கு அப்புறம் இந்த ஜோடி ‘மாறா’மல் சேர்ந்திருப்பதாலும் எதிர்பார்ப்புகள் எகிறியது என்னவோ உண்மைதான்! போதாக்குறைக்கு ட்ரைலர் வெளியான சில மணி நேரத்தில் சில மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ஹிட்டடிச்சது என்பதையெல்லாம் கணக்குப் போட்டு ‘மாறா’வைப் பார்க்க உட்கார்ந்தால் ஆரம்பமே இந்தி சீரியல் பார்க்கிறது போல் அவ்வளவு அந்நியமாக நகர்கிறது காட்சிகள்!

‘மாறா’ படத்தைப் பார்க்கணுமா வேண்டாமா என்று குழப்பமா..! இதையும் ஒரு முறை படிச்சிடுங்க.!

அடுத்தடுத்த காட்சிகள் நம்மை கதைக்குள் இழுத்துக்கொண்டு போனாலும் மனக்கண் முன்னால், பார்வதி மேனன் பட்டாம் பூச்சியாய் பறந்து வந்து போவதை கொஞ்சம் கூட தடுக்க முடியவில்லை! ஹீரோயின் பார்வதி பண்ணின எக்ஸ்பிரஷனில் ஒரு பத்து பர்சன்ட்டையாவது கண்ணில் காட்டியிருந்தால், கலர் ஃபுல்லான கொச்சினுக்குள் நாமும் இருக்கிற ஃபீல் கிடைத்திருக்கும்! மலையாள படத்தில் எதுவெல்லாம் பார்வதிக்கு’ ப்ளஸ்’ஆக இருந்ததோ அதையெல்லாம் ஏன் இதில் பயன்படுத்தாமல் விட்டார்கள் என்பது புரியவே இல்லை!? அற்புதமான காதல் கதை, சொல்லப்படுகிற விதம் வேற என ஒரு புது அனுபத்திற்கு ஆடியன்ஸைக் கொண்டு போவதற்குப் பதிலாக ‘இந்தப் பிள்ளைக்கு என்னதான் ஆச்சு’ என்று மெதுவாகவே போகிறது.

‘மாறா’ படத்தைப் பார்க்கணுமா வேண்டாமா என்று குழப்பமா..! இதையும் ஒரு முறை படிச்சிடுங்க.!

இதை நாமளே மனசுக்குள் இண்டெர்வெல் பிளாக் என்று முடிவு பண்ணிக்கொண்டு அடுத்து பார்த்தால் ஷ்ரத்தாவும்,சுற்றியிருக்கும் கேரக்டர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு நெருக்கமான மனிதர்களாக மாறுகிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. சின்ன வயசில் தான் கேட்ட சிப்பாய் கதை கண் முன்னால் காட்சியாக பார்க்கிற ஒரு பெண், அந்த இளைஞன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு தேடிப் போகிறாள் என்கிற ஒரு வரிக்கதையை க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க கொஞ்சம் அடர்த்தியாக இருக்கிறது. மாதவன் கொஞ்சம் நேரம்தான் வருகிறார் என்றாலும் படம் முழுக்க’ மாறா’ப் பற்றி பேசியும், காட்சிகளாக விரித்தும் முழு படத்திலும் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கிஷோர், குரு சோமசுந்தரம், அபிராமி என படம் முழுக்க ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்கள் கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவாக இருக்கிறார்கள்.

‘மாறா’ படத்தைப் பார்க்கணுமா வேண்டாமா என்று குழப்பமா..! இதையும் ஒரு முறை படிச்சிடுங்க.!

கதை மலைப் பிரதேசத்திற்கு நகர்ந்த பிறகு காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகிறது. க்ளைமாக்ஸ் உருக்கம். ஆனாலும் என்னோவோ ஒப்பிடக் கூடாது என்று மனசு போட்டு அடித்துக்கொண்டாலும் : தவிர்க்கவே முடியவில்லை! பொதுவாக வெற்றி பெற்ற ஒரு படத்தை ரீ மேக் பண்ணும் போது சில அபத்தங்கள் எப்போதும் ‘மாறா’து என்பதற்கு ‘மாறா’ மற்றொரு உதாரணம்.

‘சார்லி’ ன்னு ஒரு நடிகர்தானே இருக்கார்… அந்தப் பேரில் ஒரு படம் வந்துச்சா.!? என்கிற அளவில்தான் உங்களது சினிமா அப்டேட் என்றால் இந்தப்படத்தை தாராளமாக பார்க்கலாம்.

Share this story