பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சுசித்ரா… ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சுசித்ரா… ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்!

பாடகி சுசித்ரா இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் ஓரளவுக்கு மக்கள் வரவேற்பை பெற்று வருகிறது. அனிதா சம்பத்துக்கு ஸ்பேஸ் கிடைக்காதது தான் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சுசித்ரா… ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்!

இந்நிலையில் பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே தெரிவிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட சுசித்ரா, தன்னை யாரோ கொல்ல வருவதாகக் கூறிக்கொண்டு ஹோட்டலில் அறையில் இருந்து ஓடியதாகவும், அவரது அறை கதவை சிலர் தட்டியதாகவும் அருகில் இருந்தவர்கள் அதைப் பார்த்ததாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பாகின.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சுசித்ரா… ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்!

தற்போது சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதற்கான ப்ரோம் வீடியோ வெளியாகியுள்ளது. சுசித்ரா வீட்டிற்குள் நுழைந்தவுடன் போட்டியாளர்கள் பலர் அதிர்ச்சியான முகத்துடன் காணப்படுகின்றனர்.

இந்த வாட்டி போட்டி ரொம்பவே கடுமையா இருக்க மாதிரி இருக்கு. நானும் உள்ள போய் கொஞ்சம் அசைச்சு பாக்குறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைகிறார்.

சுசித்ராவின் வருகை போட்டியை இன்னும் பரபரப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story