‘குக் வித் கோமாளி’ சீசன் 2 கிராண்ட் ஃபினாலே.. டைட்டில் வின்னரானார் கனி…

‘குக் வித் கோமாளி’ சீசன் 2 கிராண்ட் ஃபினாலே.. டைட்டில் வின்னரானார் கனி…

‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டார்.

சமையலுடன், காமெடியும் கலந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘குத் வித் கோமாளி‘. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர். வித்தியாசமான தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் முதல் சீசனின் வின்னராக வனிதா தேர்வானார். இதில் ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 2 கிராண்ட் ஃபினாலே.. டைட்டில் வின்னரானார் கனி…

முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகியோர் குக்காகவும், புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாக கலந்துக்கொண்டனர். முதல் சீசனைவிட கலப்பாக ஒளிப்பரபான இந்நிகழ்ச்சியில் அஸ்வின், கனி, ஷகிலாவும் ஆகியோர் இறுதிப் போட்டி களத்தில் இருந்தனர்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 2 கிராண்ட் ஃபினாலே.. டைட்டில் வின்னரானார் கனி…

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு இன்று இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு பங்கேற்றார். இதோடு இணையம் வாயிலாக இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் நாராயணன் பங்கேற்றனர். இறுதியாக ‘குக் வித் கோமாளி‘ 2வது சீசனின் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து அஸ்வின் மற்றும் ஷகிலா ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டு கோலாகலமாக நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

Share this story