என்விட ரசிகர்கள் ஆக்டிவாக இருக்கீங்க… வீடியோ வெளியிட்ட ‘குக் வித் கோமாளி’ பவித்ரா !

என்விட ரசிகர்கள் ஆக்டிவாக இருக்கீங்க… வீடியோ வெளியிட்ட ‘குக் வித் கோமாளி’ பவித்ரா !

‘குக் வித் கோமாளி’ பவித்ரா புதிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் அடுத்து அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. முதல் சீசனில் போட்டியாளர்களாக வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். முதல் சீசனில் கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.

என்விட ரசிகர்கள் ஆக்டிவாக இருக்கீங்க… வீடியோ வெளியிட்ட ‘குக் வித் கோமாளி’ பவித்ரா !

இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா,  மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலந்துகொண்டனர். மிகவும் பிரபலமாக ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சமையலும், அப்போது நடக்கும் கோமாளித்தனமும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

என்விட ரசிகர்கள் ஆக்டிவாக இருக்கீங்க… வீடியோ வெளியிட்ட ‘குக் வித் கோமாளி’ பவித்ரா !

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக உள்ள பவித்ரா மீது புகழ் ரொமான்ஸ் செய்வதும், புகழ் மீது பவித்ரா ரொமான்ஸ் செய்வதும் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது.

என்விட ரசிகர்கள் ஆக்டிவாக இருக்கீங்க… வீடியோ வெளியிட்ட ‘குக் வித் கோமாளி’ பவித்ரா !

இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா லட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ’தெளிவான வீடியோ என்று அறிவாளித்தனமாக ஏதோ பண்ணியிருக்கேன், இதுக்கும் ஏதாச்சும் கண்டுபிடித்து காப்பி அடிக்காமல் இருந்தால் சரி’ என்று தலைப்பை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதை நீங்களே பாருங்க

Share this story