புது கார் வாங்கிய ‘குக் வித் கோமாளி’ புகழ் … குவியும் வாழ்த்துக்கள் !

புது கார் வாங்கிய ‘குக் வித் கோமாளி’ புகழ் … குவியும் வாழ்த்துக்கள் !

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் போட்டியாளராக புகழ் புது கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

புது கார் வாங்கிய ‘குக் வித் கோமாளி’ புகழ் … குவியும் வாழ்த்துக்கள் !

விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது ‘குத் வித் கோமாளி’. முதல் சீசனின் வெற்றியின் தொடர்ச்சியாக இரண்டாவது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்களாக நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா, கன்னி ஆகியோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, ‘டிக்டாக்’ சக்தி ஆகியோர் உள்ளனர்.

புது கார் வாங்கிய ‘குக் வித் கோமாளி’ புகழ் … குவியும் வாழ்த்துக்கள் !

இந்நிகழ்ச்சியில் கோமாளிகளின் பங்கு அதிகம். அவர்கள்தான் நிகழ்ச்சியை சுறுசுறுப்பாகவும், கலகலப்பாகவும் கொண்டு செல்கின்றனர். இதனால் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளே உள்ளது. இதில் புகழும் சிவாங்கியும் செய்யும் சேட்டைகள் ரசிகர்களுக்கு நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் அதிகரிக்க காரணமாக அமைந்துவிடுகிறது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

புது கார் வாங்கிய ‘குக் வித் கோமாளி’ புகழ் … குவியும் வாழ்த்துக்கள் !

இந்நிலையில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த புகழ் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையால் உயர்ந்துள்ளார். இவர் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த மகிழ்ச்சியான தருணத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் புகழுக்கு வாழ்த்து தெரிவித்த வருகின்றனர்.

Share this story