கொரானா தொற்று அதிகரிப்பு… மீண்டும் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க உத்தரவு..

கொரானா தொற்று அதிகரிப்பு… மீண்டும் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க உத்தரவு..

கொரானா அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் டாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் திரையரங்குகள் மூடப்பட்டன. அதன்பிறகு கொரானா தொற்று குறைந்ததன் எதிரொலியாக திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் திரையரங்குள் முழுமையாக இயங்க ஆரம்பித்தன.

கொரானா தொற்று அதிகரிப்பு… மீண்டும் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க உத்தரவு..

இதனால் மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றன. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் திரையரங்களில் வெளியாகின. பெரிய பட்ஜெட் படங்களையும் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனம் தயாராகின. அந்த வரிசையில் தற்போது தனுஷின் கர்ணன், சிவகார்த்திகேயனின் டாக்டர் போன்ற படங்கள் வெளியாக தயாராக உள்ளன.

கொரானா தொற்று அதிகரிப்பு… மீண்டும் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க உத்தரவு..

இதற்கிடையே நாடு முழுவதும் கொரானா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கொரானா 2வது அலை உருவாகி மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் என்ன செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர். பழைய நிலை மீண்டும் திரும்பிவிடுமோ என்ற கவலையில் அனைவரும் உள்ளனர்.

கொரானா தொற்று அதிகரிப்பு… மீண்டும் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க உத்தரவு..

இந்நிலையில் தமிழக அரசு புதிய கட்டுபாடுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளது. அதன்படி சினிமா திரையரங்குளில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கவேண்டும். சினிமா மற்றும் சின்னத்திரை பணியாளர்கள் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வதற்கு முன் கண்டிப்பாக கொரானா பரிசோதனை செய்துக்கொண்டால்தான் படப்பிடிப்பில் அனுமதிக்கவேண்டும். மற்றபடி ஷூட்டிங் நடத்த எந்தவித தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுபாடுகள் வரும் 10ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்த கட்டுபாடுகளால் தனுஷின் கர்ணன் நாளை வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this story