“தாமதம் வேண்டாம்”… கொரானா தடுப்பூசி போட்ட பின் பிரபல இசையமைப்பாளர் ட்வீட் …

“தாமதம் வேண்டாம்”… கொரானா தடுப்பூசி போட்ட பின் பிரபல இசையமைப்பாளர் ட்வீட் …

தாமதிக்காமல் கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என பிரபல இசையமைப்பாளர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக உலகையே ஆட்டி படைத்து வருகிறது கொரானா. இந்த தொற்றால் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.அதன்பிறகு தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

“தாமதம் வேண்டாம்”… கொரானா தடுப்பூசி போட்ட பின் பிரபல இசையமைப்பாளர் ட்வீட் …
In this photo provided by Prime Minister of India Narendra Modi’s twitter handle, Indian Prime Minister Narendra Modi is administered a COVID-19 vaccine in New Delhi, India, Monday, March 1, 2021. India is expanding its COVID-19 vaccination drive beyond health care and front-line workers, offering the shots to older people and those with medical conditions that put them at risk. As of Monday, those eligible to be vaccinated include people over 60, as well as those over 45 who have ailments such as heart disease or diabetes that make them vulnerable to the coronavirus. (Prime Minister of India Narendra Modi’s twitter handle via AP Photo)

தடுப்பூசி கையிருப்பு காரணமாக முன்னுரிமையின் அடிப்படையில் முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இருந்தப்போதிலும் மக்களிடையே தடுப்பூசி குறித்த அச்சம் நிலவி வந்தது. இதை களைய‌ பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிரபலங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதேபோன்று நடிகை குஷ்பு, கமல்ஹாசன், மோகன் லால் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்த வரிசையில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நேற்று கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டார். இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட அவர், “இன்று நான் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டேன். அதேபோல் அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள். தாமதம் வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share this story