கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’… நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்…

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’… நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்…

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகும் படம் ‘பிரண்ட்ஷிப்’. ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி வருகின்றனர். ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் லாஸ்லியா, சதிஷ் , JSK சதீஷ்குமார், வெங்கட் சுபா ஆகிய திரைப்பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’… நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்…

இந்த படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹர்பஜன் சிங். இது தவிர தீவிர ரஜினி ரசிகராக இருப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. புதுமுக இசையமைப்பாளர் உதயகுமார் இசையமைக்கும் இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’... நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்...

இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட் ஒன்று நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் ரீலிசாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story