“இப்படம் உங்களுக்கு டா வின்சி கோட் படத்தை நினைவுபடுத்தும்”… தயாரிப்பாளர் சிவி குமாரின் அடுத்த படைப்பு!

“இப்படம் உங்களுக்கு டா வின்சி கோட் படத்தை நினைவுபடுத்தும்”… தயாரிப்பாளர் சிவி குமாரின் அடுத்த படைப்பு!

இயக்குனரும் தயாரிப்பாளருமான சி.வி.குமார் தான் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து அறிவித்துள்ளார்.

சிவி குமார் இயக்கவிருக்கும் இப்படத்தில் டேனியல் பாலாஜி மற்றும் ராஜேஷ் சி கனகசபாய் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். “இந்த நல்ல நாளில் நான் இயக்கவிருக்கும் படத்தைப் பற்றி பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று சிவி குமார் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் பூஜை விஜயதசாமி திருநாளான இன்று நடைபெற்றது. புனித நிகழ்வில் நடைபெற்றது.

“இப்படம் உங்களுக்கு டா வின்சி கோட் படத்தை நினைவுபடுத்தும்”… தயாரிப்பாளர் சிவி குமாரின் அடுத்த படைப்பு!

சி.வி.குமார் முன்னதாக மாயவன் மற்றும் கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், முண்டாசுப் பட்டி, இன்று நேற்று நாளை, இறுதிச் சுற்று உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.

“இப்படம் உங்களுக்கு டா வின்சி கோட் படத்தை நினைவுபடுத்தும்”… தயாரிப்பாளர் சிவி குமாரின் அடுத்த படைப்பு!

இப்படம் ஒரு அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாக உள்ளது என்று சிவி குமார் தெரிவித்துள்ளார். “முன்பு ஒரு சில படங்களில் நடித்த ராஜேஷ், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படம் பல வரலாறுகளையும் கொண்டிருக்கும். தி டா வின்சி கோட் திரைப்படம் என்னை மிகவும் ஈர்த்தது. இந்தப் படம் டா வின்சி கோட் படத்தை உங்களுக்கு நினைவு படுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story