துப்பாக்கிச் சூட்டில் தங்கப் பதக்கம்… அஜித்தைப் புகழ்ந்த துணை முதலமைச்சர்!

துப்பாக்கிச் சூட்டில் தங்கப் பதக்கம்… அஜித்தைப் புகழ்ந்த துணை முதலமைச்சர்!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற நடிகர் அஜித்திற்கு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாது ரேஸிங், புகைப்படக் கலைஞர், சிறிய ரக விமானங்கள் ஓட்டுவது, வடிவமைப்பது என பன்முகத்திறமை கொண்டவர். அதில் துப்பாக்கிச் சூடுதலும் ஒன்று. சில தினங்களுக்கு முன்பு அஜித் துப்பாக்கிச் சூடு போட்டிக்குத் தயாராகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

துப்பாக்கிச் சூட்டில் தங்கப் பதக்கம்… அஜித்தைப் புகழ்ந்த துணை முதலமைச்சர்!

இதையடுத்து 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அஜித் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அஜித் தங்கப்பதக்கத்துடன் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

துப்பாக்கிச் சூட்டில் தங்கப் பதக்கம்… அஜித்தைப் புகழ்ந்த துணை முதலமைச்சர்!

தற்போது தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தங்கப் பதக்கம் வென்ற அஜித்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

“தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

Share this story