மரண மாஸாக ஒர்கவுட் செய்யும் தனுஷ் மற்றும் சாரா அலிகான் !

மரண மாஸாக ஒர்கவுட் செய்யும் தனுஷ் மற்றும் சாரா அலிகான் !

நடிகர் தனுஷ் தற்போது தனது மூன்றாவது பாலிவுட் திரைப்படமான அதிரங்கி ரே படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

மரண மாஸாக ஒர்கவுட் செய்யும் தனுஷ் மற்றும் சாரா அலிகான் !

இந்த திரைப்பதை தனுஷ் ஹிந்தியில் நடித்து வெளியான ராஞ்சனா படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் மதுரையில் நடைபெறுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

தற்போது தனுஷ் மற்றும் சாரா அலிகான் ஜிம்மில் ஒன்றாக ஒர்கவுட் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஒர்கவுட் வீடியோவின் பின்னணியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ”பேட்ட” திரைப்பட பாடல் ”மரணம் ..மாசு மரணம்..” இடம்பெறுவதால் அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துகொண்ட சாரா அலி கான், “தலைவாவுடன் பயிற்சி” என்று தலைப்பிட்டுள்ளார்.

Share this story