ஜகமே தந்திரம் தியேட்டர்ல தான் ரிலீஸ் ஆகணும்… போஸ்டர் அடித்து அதகளப்படுத்தும் தனுஷ் ரசிகர்கள்!

ஜகமே தந்திரம் தியேட்டர்ல தான் ரிலீஸ் ஆகணும்… போஸ்டர் அடித்து அதகளப்படுத்தும் தனுஷ் ரசிகர்கள்!

ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகவேண்டும் என்று தனுஷ் ரசிகர்கள் போஸ்டர் அடித்து வலியுறுத்தி வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் பிரபல ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக சில தினங்களுக்கு பல செய்திகள் வெளியாகின. அதையடுத்து தனுஷ் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள், எனது ரசிகர்களைப் போலவே ஜகமே தந்திரம் திரையரங்குகளில் வெளியாகும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜும் தனது விருப்பமும் அதுதான் என்று தெரிவித்திருந்தார்.

ஜகமே தந்திரம் தியேட்டர்ல தான் ரிலீஸ் ஆகணும்… போஸ்டர் அடித்து அதகளப்படுத்தும் தனுஷ் ரசிகர்கள்!

மாஸ்டர் படத்தின் வரவேற்பு கோலிவுட்டில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் படங்களை வெளியிட பல தயாரிப்பாளர்கள் முன்வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது ஜகமே தந்திரம் படமும் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என்று தனுஷ் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஜகமே தந்திரம் தியேட்டர்ல தான் ரிலீஸ் ஆகணும்… போஸ்டர் அடித்து அதகளப்படுத்தும் தனுஷ் ரசிகர்கள்!

தமிழகம் முழுதும் உள்ள தனுஷ் ரசிகர்கள் ஜகமே தந்திரம் படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என்று போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஜகமே தந்திரம் தியேட்டர்ல தான் ரிலீஸ் ஆகணும்… போஸ்டர் அடித்து அதகளப்படுத்தும் தனுஷ் ரசிகர்கள்!

ஜகமே தந்திரம் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ளனர்.

Share this story