அவெஞ்சர்ஸ் இயக்குனர்களுடன் கைகோர்க்க குடும்பத்துடன் அமெரிக்கா பறக்கும் தனுஷ்!

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களுடன் கைகோர்க்க  குடும்பத்துடன் அமெரிக்கா பறக்கும் தனுஷ்!

நடிகர் தனுஷ் தான் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படத்திற்காக குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல விமான நிலையம் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தனுஷ் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வந்தார். அந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ படத்தின் டப்பிங்கையும் தனுஷ் முடித்துள்ளார். நேற்று தான் போயஸ் கார்டனில் புதிதாக கட்டவிருக்கும் வீட்டிற்கு பூமி பூஜை நடத்தினார். அதில் ரஜினி நேரில் கலந்துகொண்டார்.

தற்போது தான் நடிக்க இருக்கும் ஹாலிவுட் படத்திற்காக குடும்பத்துடன் அமெரிக்கா செல்லத் தயாராகியுள்ளார் தனுஷ். அங்கு தனுஷ் இரண்டு மாதங்கள் தங்கி நடிக்க உள்ளாராம். விமான நிலையத்தில் தனுஷ் தனது குடும்பத்தினருடன் செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களுடன் கைகோர்க்க  குடும்பத்துடன் அமெரிக்கா பறக்கும் தனுஷ்!

தனுஷ் அவெஞ்சர்ஸ் படத்தைஇயக்கிய ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தி கிரே மேன் படத்தில் நடிக்கவுள்ளார். மார்க் கிரீனியின் 2009 நாவலை தழுவி ‘தி கிரே மேன்’ படம் எடுக்கப்படுகிறது. இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கேப்டன் அமெரிக்காவாக அறியப்படும் கிறிஸ் எவன்ஸ், மற்றும் அனா டி அர்மாஸ் ஆகியோருடன் ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களுடன் கைகோர்க்க  குடும்பத்துடன் அமெரிக்கா பறக்கும் தனுஷ்!

200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் நெட்பிலிக்ஸ் ஒரிஜினலின் மிக பெரிய பட்ஜெட் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது.

Share this story