தனுஷின் ‘கர்ணன்’ படத்துக்கு தடையா ? இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்…

தனுஷின் ‘கர்ணன்’ படத்துக்கு தடையா ? இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்…

தனு நடித்து வெளியாகவுள்ள கர்ணன் படத்துக்கு தடைக்கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனுஷின் ‘கர்ணன்’ படத்துக்கு தடையா ? இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்…

தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கௌரி கிஷன், லால், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தனுஷின் ‘கர்ணன்’ படத்துக்கு தடையா ? இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்…

ஏற்கனவே இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இந்த பாடல் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக புல்லட் பிரபு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

தனுஷின் ‘கர்ணன்’ படத்துக்கு தடையா ? இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்…

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கும் வரை கர்ணன் படத்தை வெளியிடக்கூடாது என்றும், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தணிக்கைத்துறை வழங்கிய சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து திரைப்பட தணிக்கைத் துறை மண்டல அலுவலர், இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால் கர்ணன் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற நிலை உருவாகியுள்ளது.

Share this story