திட்டமிட்டபடி வெளியாகுமா ‘கர்ணன்’ ?… லாக்டவுட் அச்சத்தில் ரசிகர்கள்…

திட்டமிட்டபடி வெளியாகுமா ‘கர்ணன்’ ?… லாக்டவுட் அச்சத்தில் ரசிகர்கள்…

‘கர்ணன்’ திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற அச்சத்தில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

திட்டமிட்டபடி வெளியாகுமா ‘கர்ணன்’ ?… லாக்டவுட் அச்சத்தில் ரசிகர்கள்…

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நடிகை ரெஜிஷா விஜயன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

திட்டமிட்டபடி வெளியாகுமா ‘கர்ணன்’ ?… லாக்டவுட் அச்சத்தில் ரசிகர்கள்…

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்துள்ளன. இதில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் யூடியூப்பில் 13மில்லியன் பாடல்களை பெற்றுள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு தணிக்கைத்தறை யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது .

திட்டமிட்டபடி வெளியாகுமா ‘கர்ணன்’ ?… லாக்டவுட் அச்சத்தில் ரசிகர்கள்…

இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் ஒரு வாரத்திற்கான டிக்கெட் ஹவுஸ்புல் ஆகிவிடும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது. எனெனில் கொரானா நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் விரைவில் லாக்டவுட் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே அண்டை மாநிலமான கர்நாடகாவில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் கட்டுபாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘கர்ணன்’ வெளியாவதில் சிக்கல் எழுமா என ரசிகர்கள் அஞ்சி வருகின்றனர்.

Share this story