கோலிவுட் முதல் ஹாலிவுட் வரைக் கொடிகட்டிப்பறக்கும் தனுஷ் !

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரைக் கொடிகட்டிப்பறக்கும் தனுஷ் !

கோலிவுட் பாலிவுட், ஹாலிவுட் படங்கள் என ரௌண்டுகட்டி நடிக்கும் நடிகர் தனுஷ் தற்போது இரண்டாவது முறையாக ஹாலிவுட்டில் என்ட்ரி போட்டுள்ளார்.

மார்க் கிரீனியின் 2009 நாவலை தழுவி எடுக்கப்படும், ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரைக் கொடிகட்டிப்பறக்கும் தனுஷ் !

அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரஸ்ஸோ பிரதர்ஸ் இப்படத்தை இயக்குகின்றனர்.இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கேப்டன் அமெரிக்காவாக நடித்துள்ள கிறிஸ் எவன்ஸ், மற்றும் அனா டி அர்மாஸ் ஆகியோருடன் ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் நெட்பிலிக்ஸ் ஒரிஜினலின் மிக பெரிய பட்ஜெட் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது .இதில் அவென்ஜர்ஸ் படங்களின் திரைக்கதை எழுத்தாளர்களான பணியாற்றிய கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் மெக்ஃபீலி பணிபுரிகின்றனர்.

‘எக்ஸ்டரார்டினரி ஜேர்னி ஆப் பகிர்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமான நடிகர் தனுஷுக்கு இப்படம் ஹாலிவுட்டில் மீண்டும் ஒரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தனுஷின் தரம் உயர்வது மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுவருகிறார்.

Share this story