Tuesday, March 9, 2021

Movie Stills

தனுஷுடன் மீண்டும் ஜோடிப்போடும் நடிகை.. ‘நானே வருவேன்’ அப்டேட்

3வது முறையாக நடிகர் தனுஷுடன் தமன்னா நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களை அடுத்து செல்வராகவன்-தனுஷ் கூட்டணி இணையும் படம் நானே வருவேன். இந்த கூட்டணியில் செல்வராகவனுக்கு இசையில் பேவரிட்டாக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா.

தனுஷ்-செல்வராகவன்- யுவன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணா கவனிக்கிறார்.

Simha Putrudu Movie Stills

இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ள இரு போஸ்டர்களை நேற்று முன்தினம் இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனுஷுக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதல் நாயகியாக தமன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை தமன்னா, படிக்காதவன், வேங்கை படங்களில் தனுஷுடன் நடித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

விவாகரத்து கேட்ட மனைவியைச் சேர்த்து வைத்த கொரோனா… ரஜினி பட வில்லனுக்கு நடந்த ருசிகர சம்பவம்!

கொரோனா காரணமாக பிரிந்திருந்த தன் மனைவியுடன் சேர்ந்துள்ளார் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் ரஜினியின் பேட்ட...

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி!

பாலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறித்தனமாக ஆட்டம் ஆடிய கொரோனா தற்போது தன் வேகத்தைக் குறைத்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே சிலர் கொரோனாவின்...

சென்னைக்குத் திரும்பும் அண்ணாத்த!

அண்ணாத்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் வைத்து நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றது....

Actress

TTN Cinema