சந்தானத்தின் சரவெடியில் ‘டிக்கிலோனா’… வெளியானது லிரிக்கல் வீடியோ…

சந்தானத்தின் சரவெடியில் ‘டிக்கிலோனா’… வெளியானது லிரிக்கல் வீடியோ…

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சந்தானத்தின் சரவெடியில் ‘டிக்கிலோனா’… வெளியானது லிரிக்கல் வீடியோ…

கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டிக்கிலோனா’. சந்தானம் காமெடி கலாட்டாவில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஹீரோயினாக அனகா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஷிரின், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் உட்பட ஒரு காமெடி பட்டாளமே களம் இறங்கியுள்ளது.

சந்தானத்தின் சரவெடியில் ‘டிக்கிலோனா’… வெளியானது லிரிக்கல் வீடியோ…

சந்தானம் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இதனால் இந்த படத்தின் மீதான இசைக்கு எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

சந்தானத்தின் சரவெடியில் ‘டிக்கிலோனா’… வெளியானது லிரிக்கல் வீடியோ…

இந்நிலையில் ‘டிக்கிலோனா’ படத்தின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரீமிக்ஸ் பாடலாக உருவாகியுள்ள ’பேர் வச்சாலும் வைக்காம’ பாடல் வெளியாகியுள்ளது. கமல் நடித்த ’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் பாடலான இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Share this story