நடிகர் அருள்தாஸைப் பாராட்டிய ஜான் மகேந்திரன்… அப்பா வழியைப் பின்பற்றும் இயக்குனர்!

நடிகர் அருள்தாஸைப் பாராட்டிய ஜான் மகேந்திரன்… அப்பா வழியைப் பின்பற்றும் இயக்குனர்!

இந்த கொரோனா கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தியேட்டர்களை முடக்கிவிட்டது. இது ஓடிடி தளங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஓடிடி தளங்கள் அபார வளர்ச்சியடைந்துள்ளன.

மக்கள் தற்போது ஓடிடி தலங்களுக்கு ஏற்ப மாறிவிட்டனர். ஓடிடி தளத்தில் மிகப்பெரிய நன்மையாக இருப்பது அனைத்து மொழிப் படங்கள், மற்ற நாடுகளின் படங்கள், ஓடிடி-க்கென்றே எடுக்கப்படும் படங்கள் என அனைத்தும் பார்வையாளர்களால் பார்க்க முடிகிறது .

நடிகர் அருள்தாஸைப் பாராட்டிய ஜான் மகேந்திரன்… அப்பா வழியைப் பின்பற்றும் இயக்குனர்!

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தாங்கள் பார்த்த படத்தின் கதை பற்றியும், அதன் களம், கதாபாத்திரங்கள் என்று மிக நுட்பமாக சொல்லுவதில் பலரது கவனத்தையும் ஈர்ப்பவர் இயக்குனர் ஜான் மகேந்திரன். இவரது விமர்சனத்தைப் படித்துவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு எந்த மொழிப்படமாக இருந்தாலும் சப் டைட்டில் இல்லாமலே படம் பார்க்கலாம்; அந்தளவுக்கு விலாவாரியாக இருக்கும் இவரது விமர்சனம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம்வரும் அருள்தாஸ் பற்றி ஒரு விமர்சனத்தை சில தினங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார்.


“மலையாள திரைப்படங்கள் பார்க்கும் போது, அதில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒவ்வொருவரும், நடிகர்களாக தெரியாமல் மண்ணின் மனிதர்களாக தெரிவார்கள். இப்படி எதார்த்தமாக நடிக்கும் நடிகர்கள் இங்கு மிக குறைவு….

நடிகர் அருள்தாஸைப் பாராட்டிய ஜான் மகேந்திரன்… அப்பா வழியைப் பின்பற்றும் இயக்குனர்!

அப்படி மிக சிலரில் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் அருள்தாஸ் கொடுத்த கதாபாத்திரத்தை மிக இயல்பாக நடிக்க கூடிய நடிகர் லாக்டவுனில் இவர் நடித்த நிறைய திரைப்படங்களை பார்க்க நேர்ந்தது இவர் நடித்த அனைத்து கதாபாத்திரத்தையும் மிக இயல்பாகவும் எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார் குறிப்பாக சமீபத்தில் இவர் நடித்த வெப்சீரிஸ் நவம்பர் ஸ்டோரி’ஸ் இவரின் இயல்பான நடிப்புக்கு சான்று…சபாஷ் Arul Dass.” என்று தெரிவித்திருந்தார்.

தமிழ் சினிமாவின் மிகவும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் மகேந்திரன். அவரது படங்கள் தற்போதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அவர் புதிதாக சினிமாவுக்கு வருகிற கலைஞர்கள் கவனத்திற்குரிய படைப்பை கொடுத்திருந்தால் எந்த ஈகோவும் இல்லாமல் அவர்களை அழைத்து மனதார பாராட்டுவார். அவர் வாரிசான இயக்குனர் ஜான் மகேந்திரனும் திறமையான கலைஞர்களை பாராட்டுவதில் தந்தையின் வழியில் நடத்தி வருவது பலரது மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.

Share this story