Tuesday, June 15, 2021

திருமணத்திற்காக சொந்த ஊர் சென்ற சாய் பல்லவி… வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சராக வந்து ரசிகர்கள் மனதில் நீங்கா படம் பிடித்தவர்...

Movie Stills

ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடிப்போட தயாராகும் ஸ்ரீதேவியின் மகள் ?

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் முக்கியமான இடம் ஜூனியர் என்.டி.ஆருக்கு உள்ளது. இவர் தற்போது ராஜமௌலி இயக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்‘ படத்தில் நடித்து வருகிறார். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் கொரானா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடிப்போட தயாராகும் ஸ்ரீதேவியின் மகள் ?

இந்த படத்தை முடித்து கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆரின் 31வது படத்தை கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடிப்போட தயாராகும் ஸ்ரீதேவியின் மகள் ?

இதற்கிடையே இந்தியில் இளம் நடிகையாக வலம் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தற்போது அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கோஸ்ட் ஸ்டோரிஸ், குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள், ரூஹி போன்ற நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடிப்போட தயாராகும் ஸ்ரீதேவியின் மகள் ?

இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க ஜான்வி கபூருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தெலுங்கு படங்களில் நடிக்க ஜான்வி தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இருந்தப்போதிலும் ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் தெலுங்கில் அறிமுகமானால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என ஜான்வி கபூர் தரப்பில் யோசிக்கப்படுகிறதாம். அதேநேரம் விரைவில் இந்த படத்தில் ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என படத்தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.

Latest Posts

திருமணத்திற்காக சொந்த ஊர் சென்ற சாய் பல்லவி… வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சராக வந்து ரசிகர்கள் மனதில் நீங்கா படம் பிடித்தவர்...

திருமணம் எப்போது ? சீக்ரெட்டை உடைத்த நடிகை டாப்ஸி !

தனது திருமணம் குறித்த சில ரகசியங்களை நடிகை டாப்ஸி உடைத்துள்ளார். வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம்‌ அறிமுகமானவர் நடிகை...

என்னைப்போல் நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – பிரபல நடிகை வேண்டுகோள் !

அனைவரும் மாஸ்க் அணிந்துக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என நடிகை வெண்பா கேட்டுக்கொண்டுள்ளார். தமிழில் ‘காதல் கசக்குதய்யா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வெண்பா....
ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடிப்போட தயாராகும் ஸ்ரீதேவியின் மகள் ?ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடிப்போட தயாராகும் ஸ்ரீதேவியின் மகள் ?

Actress

-Advertisement-
TTN Cinema