சின்ன வயசில் விஜயின் தீவிர ரசிகர்… இப்போ ரேஞ்சே வேற..!?

சின்ன வயசில் விஜயின் தீவிர ரசிகர்… இப்போ ரேஞ்சே வேற..!?

இயக்குனர் ரத்னகுமார் நடிகர் விஜயுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நம் அனைவரும் எதோ ஒரு நடிகருக்கு தீவிர ரசிகராக இருப்போம். அவர்களை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிடமாட்டோமா என்ற ஏங்கும் ரசிகர்கள் பல. அவர்களில் ஒரு சிலருக்கே தங்கள் கனவுக் கதாநாயகர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அப்படித் தான் இயக்குனர் ரத்னகுமாருக்கும் தனது சிறுவயதில் விஜயுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். ப்ரியமுடன் படப்பிடிப்பில் தனது உடன்பிறந்தோர்களுடன் விஜய் அருகில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CGXiKbVDZeq/?utm_source=ig_web_copy_link

இயக்குனர் ரத்னகுமார் மேயாத மான், ஆடை என்ற இரு படங்களை எடுத்துள்ளார். இந்த இரு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றவை. அவர் பல படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

Rathna Kumar

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திற்கு திரைக்கதை எழுதியவர்களில் ரத்னகுமாரும் ஒருவர். தான் தீவிர விஜய் ரசிகர் என்று ரத்னகுமாரே கூறியிருக்கிறார். சிறு வயதில் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட அதே சிறுவன் இன்று தனது கதாநாயகனுக்கே திரைக்கதை எழுதி அவர் தோள் மேல் கை போடும் அளவிற்கு வளர்த்துள்ளார் என பலர் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

Share this story