என்ன இது நான் ஸ்டாப் ஆ போய்ட்ருக்கு… இரண்டாம் குத்து இயக்குனரின் அடுத்த படம்!

என்ன இது நான் ஸ்டாப் ஆ போய்ட்ருக்கு… இரண்டாம் குத்து இயக்குனரின் அடுத்த படம்!

இரண்டாம் குத்து இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டறையில் முரட்டுக்குத்து நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து தற்போது இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படத்தை அப்படத்தின் இயக்குனர் ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ளார். இப்படம் பல சர்ச்சையை ஏற்படுத்தியது அனைவருக்கு தெரிந்ததே.

என்ன இது நான் ஸ்டாப் ஆ போய்ட்ருக்கு… இரண்டாம் குத்து இயக்குனரின் அடுத்த படம்!

எல்லை மீறிய ஆபாசம் இருப்பதாக பலர் இந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் டீசரை யூடியூபில் இருந்து நீக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீபாவளிக்கு இரண்டாம் குத்து படம் திரரையரங்குகளில் வெளியாகியிருந்தது. படத்திற்கு மக்களிடையே ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

இன்று சந்தோஷ் ஜெயக்குமார் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அப்படத்திற்கு விர்ஜின் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலும் சந்தோஷ் தான் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு எந்தளவிற்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதைப் பார்ப்போம்!

Share this story