“தேர்வு என்பது முக்கியமாக இருக்கலாம்.ஆனால் முற்றுப் புள்ளி அல்ல”… மாணவர்களுக்கு தன்னபிக்கை அளிக்கும் செல்வராகவன்!

“தேர்வு என்பது முக்கியமாக இருக்கலாம்.ஆனால் முற்றுப் புள்ளி அல்ல”… மாணவர்களுக்கு தன்னபிக்கை அளிக்கும் செல்வராகவன்!

இயக்குனர் செல்வராகவன் மாணவர்களிடம் தேர்வு மட்டுமே வாழ்க்கைக்கு முக்கியமல்ல என்று தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு நீட் தேர்வை அரசு அறிமுகப்படுத்தியதில் இருந்தே தமிழகத்தில் தீவிர எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இருந்தாலும் பல எதிர்ப்புகளுக்கிடையே நீட் தேர்வு நடந்து முடிந்தது. தேர்வு குறித்த மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

"தேர்வு என்பது முக்கியமாக இருக்கலாம்.ஆனால் முற்றுப் புள்ளி அல்ல"... மாணவர்களுக்கு தன்னபிக்கை அளிக்கும் செல்வராகவன்!

தங்கள் கனவு நிறைவேறாத துக்கத்தில் பல மாணவர்கள் தற்கொலைப் பாதையை தேர்ந்தெடுக்கின்றனர். அது மட்டுமில்லாமல் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களும் விரக்தியில் தங்கள்உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்று பலர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்தாலும் தற்கொலைகள் தொடர்கதைகள் தான்.

“தேர்வு என்பது முக்கியமாக இருக்கலாம்.ஆனால் முற்றுப் புள்ளி அல்ல”… மாணவர்களுக்கு தன்னபிக்கை அளிக்கும் செல்வராகவன்!

தற்போது இயக்குனர் செல்வராகவன் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “என் அன்பு நண்பர்களே! அனுபவத்தில் சொல்கிறேன்.சத்தியம். தேர்வு என்பது முக்கியமாக இருக்கலாம்.ஆனால் முற்றுப் புள்ளி அல்ல.அதில் தோற்றாலும் வாழ்க்கை பல்லாயிரக்கணக்கான வாய்ப்புகளை உங்கள் பக்கம் அனுப்பிக் கொண்டே இருக்கும்! துணிவுடன் நிமிர்ந்து நில்லுங்கள்.வாழ்க்கை அரவணைத்துக் கொள்ளும் !” என்று தெரிவித்துள்ளார்.

Share this story