Tuesday, March 2, 2021

Movie Stills

"I am a தமிழ் பேசும் Indian"… இப்போ வெற்றிமாறனும் களத்துல இறங்கிட்டாரு!

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா அணிந்திருந்த டி-சர்ட்டில் இடம்பெற்றிருந்த ‘I am a தமிழ் பேசும் Indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட்கில் உள்ளன.
சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில், இந்தி தெரியாது என்றதற்காக விமான நிலைய அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன்  கூறியது தமிழகம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
Image
அதையடுத்து யுவன் சங்கர் ராஜா மற்றும் மெட்ரோ சிரிஷ் ஆகியோர் அணிந்திருந்த டி-சர்ட்டில் இடம்பெற்றிருந்த ‘I am a தமிழ் பேசும் Indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாக்கியங்கள் இந்திய அளவில் வைரலாகின. இவர்களைத் தொடர்ந்து நடிகர் சாந்தனுவும், அவரது மனைவியும் இதே வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டனர்.
Image
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில், தமிழகம் உள்பட எல்லா மாநிலங்களிலும் மூன்றாவது மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்பதை பலரும் எதிர்த்து வருகின்றனர். இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக அன்றாடம் பலர் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.
தற்போது பலரும் ‘I am a தமிழ் பேசும் Indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாக்கியங்கள் எழுதியுள்ள டி-சர்ட் அணிந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது இயக்குனர் வெற்றிமாறனும் ‘I am a தமிழ் பேசும் Indian’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ள டி-சர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவரது மகனும் கூட இந்த டி-சர்ட்டை அணிந்துள்ளார். தற்போது இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Latest Posts

ஷங்கர் படத்தில் இணைந்த கார்த்திக் சுப்புராஜ்!?

ஷங்கர் இயக்கவிருக்கும் டோலிவுட் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோலிவுட் ரசிகர்களுக்கு பிரம்மாண்டம் காட்டிய ஷங்கர் தற்போது...

மஹாராணியாய் மாறி மனம் மயக்கும் ப்ரியா பவானி ஷங்கர்!

நடிகை ப்ரியா பவானி ஷங்கரின் சமீபத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலில் நடிகைகளாலும் திரையில் ஜொலிக்க முடியும் என்பதற்கான முதல் சான்றாய் அமைந்தவர்...

வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கும் உருவாகும் திரிஷ்யம் 2… படப்பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பமானது…

திரியஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பூஜை இன்று நடைபெற்றது. மோகன் லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த 2013-ம் ஆண்டு...

Actress

TTN Cinema