லோகி டீசரை வெளியிட்டுள்ள டிஸ்னிப் பிளஸ் !

லோகி டீசரை வெளியிட்டுள்ள டிஸ்னிப் பிளஸ் !

டிஸ்னி மற்றும் மார்வெல் இணைந்து ஆன்டி ஹீரோ ஷோவ்வான லோகியின் முதல் டீசரை வெளியிட்டுள்ளது.

ஓவன் வில்சன், குகு மபாதா-ரா, சோபியா டி மார்டினோ, வுன்மி மொசாகு மற்றும் ரிச்சர்ட் இ. கிராண்ட் ஆகியோர் இணைத்து நடித்துள்ள இந்த சீரிஸ் ‘அவென்ஜர்ஸ் எண்ட்கேம்’ படத்தில் பதில் கிடைக்காத கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி அமைந்துள்ளது.

https://www.youtube.com/watch?v=G4JuopziR3Q&feature=emb_logo

கடந்த ஆண்டு வெளியான அவென்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தில் ஐயன் மேன் மற்றும் ஆண்ட்-மேன் இருவரும் இன்பினிட்டி கற்களைசேகரிக்க டைம் ட்ராவல் செய்வார்கள். அப்போது லோகி வரும் காட்சியில் குழப்பம் ஏற்பட்டு டெஸராக்ட் லோகி பக்கத்தில் போய் விழுந்துவிடும். யாரும் பார்க்காத போது அதை எடுக்கும் லோகி அங்கிருந்து யார் கண்ணிலும் படாமல் மறைந்துவிடுவார்.

லோகி டீசரை வெளியிட்டுள்ள டிஸ்னிப் பிளஸ் !

அதன் பின் என்ன நடந்தது ? லோகி தப்பித்து எங்கே போனார்? என்ன செய்தார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த சீரிஸ் விளக்க உள்ளதாம். காமெடி நிறைந்த க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாக்கப்பட்டுள்ள இந்த சீரிஸ் மே 2021 இல் டிஸ்னி பிளஸில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Share this story