கார்த்தி, ரஷ்மிகாவின் ரொமான்ஸ்… சுல்தான் தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர்!

கார்த்தி, ரஷ்மிகாவின் ரொமான்ஸ்… சுல்தான் தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர்!

கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

நேற்று தீபாவளியை முன்னிட்டு ஈஸ்வரன், மாஸ்டர், டாக்டர் உள்ளிட்ட பல படங்களின் அப்டேட்கள் வெளியாகின. கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ படத்தின் தீபாவளி ஸ்பெஷல் போஸ்டரும் வெளியானது. போஸ்டரில் கார்த்தி மற்றும் ரஷ்மிகா இருவரும் ரொமான்ஸ் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. இருவரும் கோவிலுக்குள் இருக்கின்றனர். ரஷ்மிகாவை அளவில்லா ஆசையுடன் பார்க்கும் கார்த்தி ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவிட்டார்.

கார்த்தி, ரஷ்மிகாவின் ரொமான்ஸ்... சுல்தான் தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர்!

ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரஷ்மிகா மந்தான்னா இருவரும் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, விவேக் -மெர்வின் இசையமைத்துள்ளனர். சுல்தான் படம் தான் கார்த்தி சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம்.

கார்த்தி, ரஷ்மிகாவின் ரொமான்ஸ்… சுல்தான் தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர்!

இதையடுத்து கார்த்தி இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். நேற்று இபபடத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கியது.

Share this story