ரசிகர்களை சந்திக்க வருகிறார் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

ரசிகர்களை சந்திக்க வருகிறார் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது

ரசிகர்களை சந்திக்க வருகிறார் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டாக்டர்’. இந்த படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர்களுடன் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

ரசிகர்களை சந்திக்க வருகிறார் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே.பிரொக்ஷன் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த மாதத்தில் நடைப்பெற்ற இறுதிக்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் பிரொக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.சமீபத்தில்தான் சிவகார்த்திகேயன் டப்பிங் பேசி முடித்ததாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.வரும் மார்ச் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த தகவலை படத்தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோ தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share this story