‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் பிரபல காமெடி நடிகர்…

‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் பிரபல காமெடி நடிகர்…

லைக்கா தயாரிக்கும் டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் காமெடி நடிகர் சூரி இணைந்து நடிக்க உள்ளார்.

‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் பிரபல காமெடி நடிகர்…

லைக்கா புரொக்ஷன் சார்பில் சுபாஷ் கரண் தயாரிக்கும் படம் ‘டான்’. சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கும் இப்படத்தை லைக்காவுடன் இணைந்து முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் பிரபல காமெடி நடிகர்...

படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அதில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் பிரபல காமெடி நடிகர்...

இந்நிலையில் ஹீரோவாக நடிக்கும் சிவகார்த்திகேயனுடன் காமெடியில் கலக்க நடிகர் சூரி ஒப்பந்தமாகியுள்ளார். வாலித்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உட்பட சில படங்களில் இந்த கூட்டணி படம் வெற்றிப்பெற்றுள்ளது. இதேபோன்று இயக்குனர் சமுத்திரகனி இந்த படத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்த அப்டேட்டுகளால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share this story